Ad Code

Responsive Advertisement

சூர்யாவுக்கு இருக்கும் அக்கறை சூப்பர்ஸ்டாருக்கு இல்லையே..? சர்ச்சையை கிளப்பும் ரசிகர்கள்


முருகதாஸ் இயக்கத்தில் உருவாக இருக்கும், ரஜினியின் 167வது படத்திற்கு 'தர்பார்' என பெயரிடப்பட்டு உள்ளது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

சூப்பர் ஸ்டார் போன்ற முன்னணி நடிகர்கள் திரைப்படங்களில் உள்ள சிறு சிறு தவறுகளையும் ஊதி பெருசாக்கி சர்ச்சையை கிளப்புவதற்கென்றே இருப்பார்கள் என நினைக்க தோன்றும் அளவிற்கு வரிசையாக பல சர்ச்சைகள் அண்மையில் கிளம்பி இருந்தது.

இந்நிலையில், ரஜினி-முருகதாஸின் திரைப்படத்திற்கு தமிழில் இல்லாமல் வேற்று மொழியில் 'தர்பார்' என பெயரிடப்பட்டிருப்பதை காரணம் காட்டி சர்ச்சைகள் எழ துவங்கி இருக்கிறது.

'சூர்யா போன்ற நடிகர்கள் தங்களது படங்களுக்கு தமிழில் பெயர் சூட்டவே நிர்பந்திக்கும் நிலையில், ரஜினி போன்ற உச்ச நடிகர்கள் ஏன் இதே முறையை பின்பற்ற கூடாது' என்ற கேள்வியும் தற்பொழுது எழுப்பப்பட்டு வருகிறது.