Ad Code

Responsive Advertisement

படு மாஸான தோற்றத்தில் ரஜினி..! லீக்கான 'முருகதாஸ்-ரஜினி' திரைப்பட போட்டோஷூட் புகைப்படம்


நடிகர் ரஜினி தனது '166-வது' படத்திற்கான இயக்குனர் முருகதாஸ் உடன் இணைந்திருந்தார். இத்திரைப்படத்திற்கான போட்டோஷூட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

பேட்ட திரைப்படத்தினை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், லைகா ப்ரொடக்சன் தயாரிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். முதற்கட்டமாக இத்திரைப்படத்தின் போட்டோஷூட் அண்மையில் சென்னையிலுள்ள AVM ஸ்டூடியோஸில் நடைபெற்றது.

Also Read | எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆகிட்டாரே.? ரசிகர்களை கவலையில் ஆழ்த்திய பாண்டிராஜ் 

இந்நிலையில் அதிகாரபூர்வமாக வெளியிடுவதற்கு முன்னதாகவே சில விஷமிகள், அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு உள்ளனர். கையில் வாளுடன் படுமாஸாக ரஜினி தோன்றியிருக்கும் அந்த புகைப்படம் லீக்கானது ஒருபுறம் படக்குழுவினருக்கு அதிர்ச்சியை கொடுத்திருந்தாலும், ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தும் இருப்பதால் நிம்மதி பெருமூச்சும் விட்டிருக்கின்றனர்.