சென்ற வருடம் டிசம்பர் மாதம், அமெரிக்க பாடகரான நிக்ஜோனாசை காதல் திருமணம் செய்து கொண்டார் நடிகை ப்ரியங்கா சோப்ரா. ஒட்டுமொத்த திரையுலகும் வியந்து பார்க்கும் படி கோலாகலமாக நடைபெற்றது இவர்களது திருமணம்.
இந்நிலையில் இவர்களுக்கிடையேயான திருமண பந்தம், முடிவுக்கு வர இருப்பதாக செய்தி வெளியிட்டது பிரபல அமெரிக்க பத்திரிகை. இதற்கு 'திருமணத்திற்கு முன்பு அமைதியாக, கனிவாக இருந்த ப்ரியங்கா சோப்ரா அதன் பின்னர்தான், எதெற்கெடுத்தாலும் எரிந்து விழும் தனது கோபமான மறுமுகத்தை காட்டியதாகவும், இதனால் நிக் ஜோனாசின் பெற்றோரே அவரை விவாகரத்து செய்யக்கோரி வேண்டியதும் 'காரணமாக கூறப்பட்டு இருந்தது.
இப்படியொரு செய்தி வெளியாகியுள்ள நிலையிலும் எந்த வித அறிவிப்பும் வெளியிடாமல் கண்டும் காணாதவர் போல இருந்த ப்ரியங்கா சோப்ரா, தன் கணவருடன் மகிழ்ச்சியக்காஇருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டதுடன், சட்டபூர்வமான நடவடிக்கைகளில் இறங்கி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
தங்களது உறவை பற்றி இப்படியொரு பகிரங்க செய்தியை வெளியிட்ட, குறிப்பிய அமெரிக்க ஊடகத்தின் மீது, மான நஷ்ட வழக்கு தொடுக்க இருக்கிறதாம் இந்த புதுமண தம்பதி. மேலும் நஷ்ட ஈடாக பலகோடி ரூபாயும் கேட்டு தொடரப்பட இருக்கிறதாம் அந்த வழக்கு.
Social Plugin