Ad Code

Responsive Advertisement

தலன்னா தலதான்!!! 'நேர்கொண்ட பார்வை' படப்பிடிப்பில் கலக்கிய அஜித்


விஸ்வாசம் திரைப்பட மாபெரும் வெற்றியை தொடர்ந்து நடிகர் அஜித் இப்பொழுது 'நேர்கொண்ட பார்வை' திரைப்படத்தில் நடித்து வருகிறார். தீரன் அதிகாரம் ஒன்று திரைப்பட புகழ் வினோத்தின் இயக்கத்தில் உருவாகி வந்த இத்திரைப்பட படப்பிடிப்புகள் அண்மையில் முடிவடைந்தது.

வருகிற ஆகஸ்ட் மாதம், 10ம் தேதி ரிலீஸ் எனவும், அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி வெளியாகிவிட்ட நிலையில், படப்பிடிப்பில் நிகழ்ந்த சுவாரஸ்யமான விஷயம் குறித்த தகவல் கசிந்துள்ளது.

இத்திரைப்படத்தில் வழக்கறிஞராக நடிக்கும் அஜித், கோர்ட்டில் வாதாடும் காட்சி ஒன்று இறுதியாக படமாக்கப்பட்டு இருந்தது. அதில் அஜித் நீளமான வசனம் ஒன்றை பேசும் காட்சி படமாக்கப்பட, வசனம் கடினமானது என்பதனால் நீண்ட நேரம் ஆகும் என படக்குழுவினரே எதிர்பார்த்திருந்தனர்.

ஆனால் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் விதமாக, குறிப்பிட்ட காட்சியை ஒரே டேக்கில் முடித்து கொடுத்து அசத்தி, ஒட்டுமொத்த சேட்டையே கரகோசத்தினால் அதிர வைத்து விட்டாராம்அஜித்.