Ad Code

Responsive Advertisement

மின்னல் வேகத்தில் முடித்து கொடுத்த அஜித்..! 'நேர்கொண்ட பார்வை' மாஸ் அப்டேட்


H.வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் உருவாகி வரும் 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் குறித்த சூப்பர் தகவல் ஒன்று சமீபத்தில் வெளியாகியுள்ளது.

விஸ்வாசம் திரைப்பட வெற்றிக்கு பின்னர், நடிகர் அஜித், மறைந்த நடிகை ஸ்ரீ தேவிக்கு கொடுத்த வாக்கின் பெயரில், போனிகபூர் தயாரிப்பில், ஹிந்தியில் வெற்றிபெற்ற 'பிங்க்' திரைப்பட ரீமேக்கில் நடித்து வருகிறார்.

Also Read | அஜித்தை 'சாய்பாபா'வின் பக்தராக்கிய சம்பவம்..! வெளியான சுவாரஸ்ய தகவல்  

வருகிற ஆகஸ்ட் 10ம் தேதி இத்திரைப்படம் வெளியாக இருக்கும் அறிவிப்பு சில நாட்களுக்கு முன்னர் வெளியானது. மேலும் மீதமிருந்த படப்பிடிப்புகள் ஏப்ரல் மாத பாதிக்குள் முடிக்கப்படும் எனவும் திட்டமிடப்பட்டு இருந்தது.

இது குறித்து சமீபத்தில் வெளியான தகவலின் படி, குறித்த நாட்களுக்கு முன்னதாகவே அத்திரைப்பட படப்பிடிப்புகள் முடிக்கப்பட்டு விட்டது தெரியவந்துள்ளது. இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்புகளும், ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதத்தில், புகைப்படங்கள், பாடல்கள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.