Monday, 8 April 2019

'விக்னேஷ் சிவன்' காதலன் என்று நயன்தாரா எப்போ சொன்னார்..? வறுத்தெடுத்த இயக்குனர்


'கொலையுதிர் காலம்' பஞ்சாயத்தில் விக்னேஷ் சிவன், நயன்தாரா ஜோடியை சகட்டு மேனிக்கு விமர்சித்து தள்ளியுள்ளார் இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர்.

கொலையுதிர் காலம் திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகை நயன்தாராவை கொச்சையாக பேசி சர்ச்சையில் சிக்கினார் ராதாரவி. இதனால் கொந்தளித்த திரையுலக பிரபலங்களில் நயன்தாராவின் காதலரான விக்னேஷ் சிவனும் அடக்கம்.

அப்பொழுது, கொலையுதிர் காலம் திரைப்படத்தில் நயன்தாரா முழுமையாக முடித்து கொடுக்கவில்லை  என அவர் வார்த்தையை விட, படத்தை வாங்க இருந்த விநியோகஸ்தர்கள் கலண்டு கொண்டனர்.

இதனால் பெருத்த நஷ்டத்தை இத்திரைப்படம் சந்திக்க, இதற்கு விக்னேஷ் சிவன் தரப்பு நஷ்ட ஈடு வழங்க கோரி, புகார் அளிக்க இருப்பதாகவும் அறிவித்து இருந்தது தயாரிப்பாளர் தரப்பு.

மேலும், நயன்தாராவுக்காக இப்படி பேச விக்னேஷ் சிவன் யார்.? அவரை தான் காதலிப்பதாகவோ, திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவோ நயன்தாரா என்றாவது கூறி இருக்கிறாரார்? என சகட்டு மேனிக்கு விமர்சித்தும் இருக்கிறார் இயக்குனர் சக்ரி டோலட்டி.     
Disqus Comments
'