Ad Code

Responsive Advertisement

காமெடி நடிகர் முத்துக்காளை மரணமா? தீயாய் பரவும் செய்தியால் பரபரப்பு


பிரபல காமெடி நடிகர் முத்துக்காளை மரணம் என சமூக வலைத்தளங்களில் பரவும் செய்தியால் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்துள்ள நிலையில், நடிகர் முத்துக்காளையே முன்வந்து வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைத்திருக்கிறார்.

சில நாட்களாகவே, குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி நடிகர் முத்துக்காளை மரணமடைந்து விட்டதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகி கொண்டு இருந்தது.

இந்நிலையில்,  இது குறித்து நடிகர் முத்துக்களையே விளக்கம் அளித்திருக்கிறார். இவர் நடிப்பில் வெளியாக உள்ள 'வாங்க படம் பார்க்கலாம்' திரைப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பேசிய முத்துக்காளை,

'நான் இறந்து விட்டதாக, யூட்யூபில் பரவும் செய்திகள் வருத்தமளிக்கிறது. நான் நலமாக தான் உள்ளேன். இந்த வதந்தியினால் ஆயிரக்கணக்கானோர் எனக்கு போன் போட்டு விசாரிக்கின்றினர். அக்கறை கொண்ட நல்ல உள்ளங்களுக்கு நன்றி' என குறிப்பிட்டு இருந்தார்.