Ad Code

Responsive Advertisement

மாறுவேடத்தில் சென்னையை சுற்றிய கிரிக்கெட் வீரர் 'ஹைடன்' - வைரலாகும் புகைப்படம்


முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேனும்  ஆன மேத்யூவ் ஹைடன், சென்னையில் மாறுவேடத்தில் சுற்றும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

உலக புகழ்பெற்ற 'ஐபிஎல்' 20 ஓவர் போட்டிகளில், அதிக ரசிகர்களை கொண்ட அணிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ஒன்று. இதில் இடம்பெறும் கிரிக்கெட் வீரர்கள், ஒரு விளையாட்டு வீரராக மட்டுமல்லாது, தமிழனாகவும் மாறிவிடும் சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்ந்து தான் வருகிறது.

Also Read | குடிபோதையில் காரில் பறந்த நடிகை..! வாகனங்களை இடித்து அட்டூழியம் 

அந்த அளவிற்கு தமிழக ரசிகர்களின் அன்பை பார்த்து மெய் சிலிர்த்து விடுகின்றனர் குறிப்பிட்ட வீரர்கள். ஹர்பஜன் சிங், இம்ரான் தாகிர் ஆகியோர் ஒருபுறம் தமிழில் டீவீட் செய்து ரசிகர்களை உற்சாகபடுத்த, வருணனையாளராகி இருக்கும் ஹைடனோ, வேஷ்டி சட்டையில் சென்னை சுற்றி வருகிறார்.   


ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளராக ஆன முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வார்னே, 1000 ரூபாய்க்குள் நிறைய பொருட்களை வாங்க ஹைடனுக்கு சவால் விடுக்க, ஒட்டு மீசை தாடியுடன், சென்னை T.நகர் பகுதியில் ஷாப்பிங் செய்த அவர், ரசிகர்களின் கண்ணில் பட்டுவிடாமல் தனக்கு கொடுக்கப்பட்ட சவாலையும் செய்து முடித்திருக்கிறார்.

இந்த சுவாரஸ்ய நிகழ்வின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி, வழக்கம் போல தங்களது அன்பு மழையால் ஹைடனை குளிப்பாட்டி வருகின்றனர் தமிழக ரசிகர்கள்.