Tuesday, 23 April 2019

என்னிடம் இருந்து தப்பித்த ஒரே நடிகர் விஜய்!!! லைலா வெளியிட்ட சுவாரஸ்ய தகவல்


தமிழ் சினிமாவில் கள்ளழகர் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் லைலா. தனது குழந்தை தனமான சிரிப்பாலும், கன்னக்குழி அழகாலும் ரசிகர்களை கவர்ந்த இவர், திருமணத்திற்க்கு பின்பு நடிப்பதை நிறுத்திக்கொண்டார்.

தற்பொழுது இரண்டு குழந்தைகளுக்கு தாயாகி இருக்கும் இவர், மீண்டும் தமிழ் சினிமாவில் அடுத்த ரவுண்டு வர தயாராகி இருக்கிறார். அலைஸ் எனும் திரைப்படத்தில் ஏற்கனவே ஒப்பந்தமாகி இருக்கும் இவர், மேலும் திரைப்பட வாய்ப்புகளை எதிர்பார்த்து காத்திருக்கிறார்.

இந்நிலையில், ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினரின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு, தனது சமூக வலைதள பக்கத்தில் சுவாரஸ்ய தகவல் ஒன்றினை வெளியிட்டு இருக்கிறார்.

அதாவது, லைலா, சினேகா, சூர்யா நடித்த வெற்றிப்படம் 'உன்னை நினைத்து'. இதில் முதன் முதலில் நடிக்க இருந்தவர் விஜய் தானாம். இதற்காக லைலாவுடன் போட்டோ ஷூட்டில் கூட கலந்து கொண்ட அவர், திடீரென இத்திரைப்படத்தில் இருந்து விலக சூர்யாவுக்கு சென்றிருக்கிறது வாய்ப்பு.

இதனை நகைச்சுவையாக என்னிடம் இருந்து தப்பித்த ஒரே நடிகர் விஜய் என தனது சமூக வலைதள பதிவில் பகிர்ந்திருந்தார் லைலா. 

Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();