Ad Code

Responsive Advertisement

மீண்டும் திரும்பிய இளமை..! இளசுகளை கவர்ந்த குஸ்புவின் புகைப்படம்


கோவில் கட்டி வழிபாடு, குஸ்பு இட்லி என 90 களில் தனது வசீகரத்தால் கட்டிப்போட்டிருந்தவர் நடிகை குஸ்பு. கமல், ரஜினி என அப்போதைய முன்னனி நடிகர்கள் அனைவருடனும் ஜோடி போட்டு தமிழ் சினிமாவை கலக்கிய இவர், தனது அரசியல் பதிவுகளால் சமூக வலைத்தளத்தை கலக்கி வருகிறார்.

காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவான தனது பதிவுகளால் அவ்வப்போது சர்ச்சையில் சிக்கினாலும், விமர்சிப்பவர்களை அவர்கள் பாணியிலேயே விளாசி தள்ளியும் பதிலடி கொடுத்து வருகிறார்.

இப்படி இருக்க, சற்று மாறுதலாக வயதை குறைத்து காண்பிக்கும், புகைப்படம் எடுக்கும் ஆண்டிராய்டு ஆப் வழியே, 10 வயது இளமையாகி காணப்பட்ட தனது புகைப்படத்தை குஸ்பு அண்மையில் பகிர்ந்திருந்தார்.  அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பழைய குஸ்புவை நினைவு படுத்துவதாக அதனை அதிக அளவில் பகிர்ந்தும் வருகின்றனர்.