#Kasthuri #AprilFool #ElephantLionPic
உலகம் முழுவதும் முட்டாள்கள் தினம் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், நண்பர்களையும் உறவினர்களையும் முட்டாள் ஆக்க, ஏகப்பட்ட தில்லுமுல்லுகளை செய்து செய்து விட்டு, இந்த செய்தியை படித்து கொண்டிருப்பவராக நீங்கள் இருக்கலாம்.
உங்களை போலவே, நடிகை கஸ்தூரியும் அவரது ரசிகர்களை ஒரே ஒரு சமூக வலைதளப்பதிவினால் முட்டாள் ஆக்கி இருக்கிறார். சமீபத்தில் அவர் வெளியிட்டிருந்த சமூக வலைதள பதிவில், யானை சிங்கக்குட்டி ஒன்றினை தன் துதிக்கையில் ஏந்தி செல்வது போன்ற புகைப்படம் இடம்பெற்று இருந்தது.
This day last year. A photo from sloof lirpa . Many of you may have seen it, shared it... Totally amazing no?— Kasturi Shankar (@KasthuriShankar) April 1, 2019
watch this space. pic.twitter.com/uafmmIgCin
அதன் பின்னணி கதையாக, 'குறிப்பிட்ட புகைப்படம் தென்னாப்பிரிக்காவின் க்ரூகர் உயிரியல் பூங்காவில் எடுக்கப்பட்டது என்றும், குட்டியை தூக்க முடியாமல் சோர்வடைந்த பெண் சிங்கதிற்கு, அங்கிருந்த யானை உதவி செய்த அதிசய நிகழ்வின் புகைப்படம் இது' எனவும் குறிப்பிடப்பட்டு இருந்தது.
Also Read | பள்ளி விழாவுக்கு படுகவர்ச்சி உடையில் சென்ற யாஷிகா... திட்டி தீர்க்கும் ரசிகர்கள்
இதனை கண்டு மெய்சிலிர்த்து போய் ரசிகர்கள் சில்லரைகளை சிதறவிட்டு கொண்டிருந்த சமயத்தில், 'குறிப்பிட்ட புகைப்படம் போட்டோசாப் செய்யப்பட்ட போலியான ஒன்று' எனவும், இதுவரை இப்புகைப்படத்தை பார்த்து உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் ஏமாந்த அதிர்ச்சிகர தகவலையும் பகிர்ந்திருந்தார்..
yup, April Fools. Straight from Kruger national park. https://t.co/C2jnCgE3qr— Kasturi Shankar (@KasthuriShankar) April 1, 2019
Social Plugin