Ad Code

Responsive Advertisement

குடும்பத்தை பிரித்தது ஏன்..? பதிலளிக்க திணறிய நாசர் மனைவி... கிளம்பும் சர்ச்சை


நடிகர் நாசரின் பெற்றோர் வறுமையில் வாடுவதாகவும், ஆனால் சிறு உதவி கூட அவர் செய்யவில்லை என்று, அவரது சகோதரர் ஜாஃபர் பத்திரிக்கையாளர்கள் முன்பு பகிரங்க குற்றச்சாட்டு வைத்தார். மேலும் இதற்கெல்லாம், நாசரின் மனைவி கமீலா தான் காரணம் எனவும் அவர் தெரிவித்து இருந்தார்.

இப்படிப்பட்ட குற்றச்சாட்டு குறித்து கமீலாவிடம் அண்மையில் கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் அவர் பதிலளிக்க திணறியது இப்பொழுது பரபரப்பை கிளப்பி இருக்கிறது.

வருகிற நாடாளுமன்ற தேர்தலை அடுத்து, நடிகர் கமல் ஹாசனின் 'மக்கள் நீதி மய்யம்' கட்சி சார்பில், வட சென்னை தொகுதியில் போட்டியிடும் கமீலா, நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டு, தங்கள் கட்சியின் கொள்கைகள், நிதி குறித்த கேள்விகளுக்கு பதிலளித்தார்.

Also Read | பத்திரிகையாளரின் ஏடாகூட கேள்வி...! மேடையில் கதறி அழுத ஸ்ரீதிவ்யா  

இந்நிலையில், 'தனது மாமனார், மாமியாரை ஒழுங்காக கவனித்துக் கொள்ளவில்லை' என்ற குற்றச்சாட்டு குறித்து கேள்வி எழுப்பப்பட, பதிலளிக்க தயங்கிய அவர், 'இது என் தனிப்பட்ட குடும்ப விஷயம், இதனை பற்றி தேர்தல் முடிந்த கையோடு, வருகிற ஏப்ரல் 19ம் தேதி பேசுகிறேன்' என தட்டி கழித்திருக்கிறார்.

கமீலாவின் இந்த நடவடிக்கை, அவர் மீதான இந்த குற்றச்சாட்டினை உண்மை என நிரூபிக்கும் விதத்தில் இருப்பதாக ரசிகர்கள் பலர் கருத்து தெரிவித்து வரும் நிலையில், ஏப்ரல் 19ம் தேதி அவர் கூற இருக்கும் பதிலை எதிர்நோக்கியும் காத்திருக்கின்றனர்.