இந்தியா முழுவதும் 'லோக் சபா' தேர்தல் வேலைகள் மும்மரமாக நடைபெற்று வரும் நிலையில். தேர்தல் பரபரப்பு மக்களையும் தொற்றி கொண்டுள்ளது. எங்கு பார்த்தாலும் தேர்தல் பிரச்சாரம், மேடை பேச்சுக்கள் என ஒட்டுமொத்த தமிழகமே கட்சி கொடிகளினாலும், விளம்பர போஸ்டர்களினாலும் நிரம்பி இருக்கிறது.
இப்படி பட்ட பிரச்சாரங்கள் மத்தில் நடிகர் கமலஹாசனின் பிரச்சாரம், நெட்டிசன்களை சுண்டி இழுத்து வருகிறது. அதிலும் குறிப்பாக நேற்று அவர் வெளியிட்டிருந்த பிரச்சார வீடியோ.
தமிழகத்தை சீர்குலைத்த அரசியல்வாதிகளின் பேச்சை கேட்டு கொந்தளிக்கும் கமல் டிவியை உடைப்பது போன்ற அந்த வீடியோ அதிக அளவில் வைரல் ஆனது.
இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் கட்சியின் சார்பில் மற்றொரு வீடியோ வெளியாகியுள்ளது. ஆனால் இம்முறை ஆக்ரோஷமாக இல்லாமல், ஆக்கபூர்வமாக, மக்களின் குடிநீர் பிரச்சனையை தீர்க்கும் தனது கட்சியின் வாக்குறுதியை பற்றி கமல் பேசி, இளம் தலைமுறையினரை கவர்ந்திழுத்து இருக்கிறார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதல் உறுதிமொழி.— Kamal Haasan (@ikamalhaasan) April 13, 2019
ஒவ்வொரு வீட்டிற்கும் சுத்தமான குடிநீர் வசதி.
வாக்களிப்பீர் #டார்ச்லைட் சின்னத்திற்கு.
உங்கள் நான். pic.twitter.com/W2zrcbDbqp
Social Plugin