Thursday, 11 April 2019

நடிகர் ஜெய்யுடன் காதலா..? இப்படி சொல்லிட்டாரே நடிகை அஞ்சலி...!


திரைத்துறையில் அதிகம் கிசு கிசுக்கப்பட்ட நட்சத்திரங்களில், அஞ்சலி மற்றும் ஜெய் ஜோடியும் ஒன்று. எங்கேயும் எப்போதும் திரைப்படத்தின் போது ஏற்பட்ட பழக்கம் காதலாக மாற, திரையுலகில் அதிகம் பேசப்பட்டது இவர்களது காதல்.

'அஞ்சலி சென்னை வந்தால் ஜெய் உடன்தான் தங்குவார், அஞ்சலிக்கு ட்ரைவர் ஜெய் தான்' என அடுத்தடுத்து எழுந்த கிசு கிசுக்கள் எதுவுமே உண்மை இல்லை என தற்பொழுது ஒரே போடாக போட்டிருக்கிறார் நடிகை அஞ்சலி.

இது குறித்து சமீபத்திய நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அஞ்சலி, 'நான் அவரை காதலிப்பதாக எப்பொழுது சொன்னேன். அவர்கள் இஷ்டத்துக்கு எங்களுக்கு இடையே காதல் என எழுதினார்கள். இப்பொழுது நிறுத்திவிட்டார்கள் அதற்கு நான் என்ன செய்ய முடியும்' என அதிரடியாக பேசி இருந்தார்.

இவர் இப்படி பேச, இவர்களுக்கிடையேயான காதலின் போது, நடிகர் ஜெய் ரூட் மாரி, இளம் நடிகை ஜனனி அய்யரை காதலிக்க துவங்கி இருந்ததே காரணம் என மற்றொரு கிசு கிசுவை முன்வைக்கிறது சினிமா வட்டாரம்.   
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();