90ml திரைப்படத்தில் நடித்து தனக்கான மதிப்பை குறைத்து கொண்ட ஓவியா, மீண்டுமொரு சர்ச்சை திரைப்படத்தில் நடித்து விமர்சனங்களுக்கு ஆளாகி இருக்கிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, தமிழகத்தில் எக்கச்சக்க ரசிகர்களை சம்பாதித்தவர் ஓவியா. இந்நிலையில் 90ml திரைப்படத்தில் குடிப்பது, ஆபாசமாக பேசுவது போன்ற காட்சிகளில் நடித்து தனக்கு கிடைத்த ரசிகர்கள் அந்தஸ்தில் பாதியை இழந்தார்.
இந்நிலையில் இவர் நடிப்பில் வெளியாக உள்ள கணேசா மீண்டும் சந்திப்போம் திரைப்படத்தினால், 'அவருக்கு உள்ள கொஞ்ச நஞ்ச அந்தஸ்தையும் இழந்துவிடுவார் போல' என ஓவியா ஆர்மியினரை கவலைப்பட வைத்துள்ளார்.
Also Read | தவறுதலாக கற்பமாகிவிட்டேன்..! எமி ஜாக்சன் வெளியிட்ட தகவல்
இத்திரைப்படத்தில் மாடர்ன் மங்கையாக வலம்வரும் ஓவியா, குடித்துவிட்டு ஃபுல் போதையில், தன்னை காதல் தொந்தரவு செய்யும் இளைஞரை, நானும் ரௌடிதான் நயன்தாரா பாணியில், 'அவனை போடணும் சார்' என டபுள் மீனிங் வசனம் பேசுகிறார்.
இந்த சம்பவம் அடங்கிய 5 நிமிட காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள நிலையில், ஓவியா குறித்து எழுந்துள்ள சர்ச்சைகளை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
Social Plugin