முருகதாஸ் இயக்கத்தில் உருவாக்க உருவாக இருக்கும், ரஜினியின்167வது படத்திற்கு 'தர்பார்' என பெயரிடப்பட்டது சில நாட்களுக்கு முன்பு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இதனை தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல முன்னணி நடிக நடிகைகளே தலையில் வைத்து கொண்டாடி வரும் நிலையில், ஒரே ஒரு முன்னணி நடிகை மட்டும் புலம்பி வருகிறாராம்.
அது வேறு யாரும் இல்லை, நம் கீர்த்தி சுரேஷ் தான். காரணம் இந்த திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக முருகதாஸ் யோசித்து வைத்து இருந்தது நடிகை கீர்த்தி சுரேஸ் தான்.
ஆனால் சூப்பர் ஸ்டாரோ, தர்பார் கதையை கேட்டு முடித்துவிட்டு 'இதில், நயன்தாரா நடித்தால் நன்றாக இருக்கும். அவரையே ஒப்பந்தம் செய்து விடுங்கள்' என கட்டளையிட, வேறு வழியில்லாமல் தனக்கு ஆகாத நடிகை நயன்தாராவை நாயகியாக்கி இருக்கிறாராம் முருகதாஸ்.
Social Plugin