திரைத்துறையில் இன்று அதிகம் பேசப்படும், நட்சத்திர காதலர்கள் இந்த ஜோடி. புகைப்படம் வெளியிடுவதோடு சரி, இவர்களுக்கிடையேயான உறவு குறித்து வாய் கூட திறக்காதவர் காதலி.
ஆனால் காதலனோ, 'இந்த காதலை வைத்து கொண்டு இவர் செய்யும் அலப்பறைகளுக்கு ஒரு அளவே இல்லாமல் போய்க்கொண்டு இருக்கிறது' என சக திரையுலகினரை கழுவி ஊற்றும் அளவிற்கு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.
தன் காதலி பற்றி எவரேனும் வாய்திறந்து விட்டால், குய்யா முய்யா என குதிக்கும் காதலன், ஒரு நாள் கூட காதலியை பிரிய மறுக்கிறாராம்.
படப்பிடிப்பு காரணமாக காதலி 30 நாட்கள் வெளிமாநிலத்திற்கு செல்ல வேண்டிய கட்டாயம் சமீபத்தில் ஏற்பட்டுள்ள நிலையில், சம்பந்தமே இல்லாமல் தன்னை புக் செய்த தயாரிப்பு நிறுவனத்தையும் வெளிமாநிலத்திற்கு அழைப்பதோடு, காதலி தங்கும் ரூம் அருகே தனக்கும் ரூம் போட்டு தருமாறு இம்சை செய்கிறாராம்.
Social Plugin