இன்றைய தலைமுறை குழந்தைகள் டெக்னாலஜியில் மட்டுமல்லாது, வித விதமாக உடையணிந்து ஃபேஷன் செக்சனிலும் ஒரு போடு போட்டு வருகின்றனர். சாதாரண மக்களின் குழந்தைகளே இப்படி என்றால், திரையுலகில் நட்சத்திரமாகி விட்ட குழந்தை நட்சத்திரங்கள் நிலைமையை கொஞ்சம் நினைத்து பாருங்கள்.
ஆம், பேபி சாரா துவங்கி, இமைக்கா நொடிகள் திரைப்படத்தில் நயன்தாராவின் மகளாக நடித்த மானஸ்வி வரை, மேக் அப் மேன் எங்கே என கேட்கும் அளவிற்கு, ஒப்பனையில் கவனம் செலுத்த துவங்கி இருக்கின்றனர்.
இவர்கள் இப்படி என்றால், என்னை அறிந்தால், விஸ்வாசம் ஆகிய படங்களில் அஜித்திற்கு மகளாக நடித்த பேபி அனிகாவோ, இனிமேலும் தான் பேபி அல்ல என்பதை நிரூபிக்கும் விதத்தில் விதவிதமான போட்டோஷூட் புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து, இப்பொழுதே நாயகி ஆவதற்கான முயற்சிகளில் இறங்கி இருக்கிறார்.
Social Plugin