Ad Code

Responsive Advertisement

ரஜினியின் படத்தை பார்த்து மிரண்ட 'அவென்ஜர்ஸ்' இயக்குனர்...! தமிழ் சினிமாவிற்கு ஹாலிவுட்டில் கிடைத்த அங்கீகாரம்


சூப்பர் ஸ்டார் ரஜினி காந்திற்கு, உலகம் முழுவதும் ரசிகர்கள் இருப்பது நாம் அறிந்த ஒன்றே. இந்நிலையில் உலக புகழ் அவென்ஜ்ர்ஸ் திரைப்படத்தை இயக்கிய 'ஜோ ரூஸ்ஸோ' ஹாலிவுட் இயக்குனரே ரஜினியின் திரைப்படம் பற்றி புகழ்ந்து பேசி தமிழ் சினிமாவுக்கே பெருமை சேர்த்து இருக்கிறார்.

இவர் இயக்கத்தில் விரைவில் வெளியாக இருக்கும், 'அவென்ஜர்ஸ் எண்டு கேம்' திரைப்பட விளம்பர நிகழ்ச்சிக்காக அண்மையில் இந்தியா வந்த 'ஜோ ரூஸ்ஸோ' ஹாலிவுட் திரைப்படங்களுக்கு இந்திய ரசிகர்களிடையே உள்ள வரவேற்பை பற்றி பிரமித்து பேசி இருந்தார்.


மேலும் அவர் சமீபத்தில் பார்த்த இந்திய திரைப்படம் எது என்றகேள்வி எழுப்பட்டிருந்த நிலையில், சூப்பர் ஸ்டாரின் 2.0 திரைப்படம் குறித்து பேசிய அவர், எங்களது  'அவென்ஜர்ஸ் ஏஜ் ஆப் அல்ட்ரான்'  திரைப்படத்தை ஒத்து கிராபிக்சில் கலக்கி இருந்த 2.0 பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன்' என்றிருந்தார்.

இப்படி உலகமே மெச்சும் பிரமாண்ட ஹாலிவுட் திரைப்பட இயக்குனர் ஒருவரே, தமிழ் திரைப்படம் ஒன்றை புகழ்ந்திருந்த சம்பவம், தமிழ் திரையுலகினரை கொண்டாட வைத்துள்ளது.