Ad Code

Responsive Advertisement

விஜயே எளிமையாக அட்லீக்கு ஏன் இந்த ஆடம்பரம்..? வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்


விஜய் போன்ற பெரிய பெரிய நடிகர்களே எளிமையை கடைபிடிக்க, இந்த இயக்குனர் அட்லீக்கு ஏன் இந்த ஆடம்பரம் என விமர்சிக்க துவங்கியுள்ளனர் ரசிகர்கள்.

இயக்குனர் ஷங்கருக்கு உதவி இயக்குனராக பணி புரிந்து, ராஜா ராணி, தெறி, மெர்சல் என அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்துவிட்ட அட்லீ படப்பிடிப்புக்கு நாயகர்களை விட பலத்த பாதுகாப்புடன் வருவது போன்ற அலப்பறைகளை செய்து சர்ச்சையில் சிக்கி இருந்தார்.

இதன் காரணமாக நடிகர் விஜயே, சில நாட்களாக அவரை தவிர்த்து வர மெர்சல் படத்திற்கு கிடைத்த சர்வதேச விருது அவரது மனதை மாற்றி இருந்தது. இப்படி இருக்க இவரை மீண்டும் சர்ச்சையில் சிக்க வைத்துள்ளது சமீபத்தில் வெளியான தகவல் ஒன்று.

நேற்று சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையே நடந்த ஐபிஎல் போட்டியின் போது, அட்லீ அணிந்து வந்திருந்த உடையின் விலை 14000 ரூபாய் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் பரவியது.

இதனை அடுத்து குவிந்த சர்ச்சைவாதிகள், 'விஜயே எங்கு சென்றாலும் எளிமையான உடையில் செல்கிறார், 3 படங்கள் இயக்கிய இயக்குனருக்கு இம்புட்டு ஆடம்பரம் தேவையா?' என சர்ச்சையை கிளப்ப துவங்கி இருக்கின்றனர்,