Ad Code

Responsive Advertisement

தவறுதலாக கற்பமாகிவிட்டேன்..! எமி ஜாக்சன் வெளியிட்ட தகவல்


நடிகை எமி ஜாக்சன், வருகிற 2020ம் ஆண்டு தனது காதலரை மணமுடிக்க இருக்கும் நிலையில், சில நாட்களுக்கு முன்பு, தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை அதிகாரபூர்வமாக அறிவித்து பரபரப்பை கிளப்பி இருந்தார்.

இந்திய சினிமாவில் மதராசபட்டினம் எனும் தமிழ் திரைப்படத்தின் மூலம் அடியெடுத்து வைத்தவர், இங்கிலாந்தை சேர்ந்த எமி ஜாக்சன். தொடர்ந்து 'ஐ', '2.0' போன்ற மாபெரும் திரைப்படங்களில் நடித்த இவர், அமெரிக்க டிவி தொடர்களிலும் நடித்து வருகிறார்.

Also Read | ஹனிமூனை என்ஜாய் செய்யும் 'ஆர்யா-சாயீசா'... ஜோடியாக வெளியான முதல் புகைப்படம்

இவர்,இங்கிலாந்தை சேர்ந்த கோடிஸ்வரரான ஜார்ஜ் பனையியோடோ என்பவரை காதலித்து வந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் திருமண நிச்சயமும் செய்துகொண்டனர். வருகிற 2020ம் ஆண்டில் கிரீக் முறையில் திருமணம் செய்து கொள்ளவும் முடிவெடுத்த இந்த ஜோடி, அதற்கு முன்னதாகவே பெற்றோராக இருக்கும் தகவல் பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

தான் தாயாக இருக்கும் மகிழ்ச்சியில் இது பற்றி பேசி இருந்த எமி ஜாக்சன், 'நான் கர்ப்பமடைந்த இருந்தது ஆறுவாரங்கள் கழித்துதான் எனக்கே தெரியும். சொல்லப்போனால் இது ஒரு விபத்துதான். என்றாலும் வரவிருக்கும் குழந்தையை நாங்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்' என தெரிவித்து இருந்தார்.