காலாச்சாரமிக்க நாட்டில் பிறந்த இந்திய நடிகைகளே, லிவிங் டுகெதர், ஃப்ரெண்ட்ஸ் வித் பெனிபிட்ஸ் போன்ற மேற்கத்திய கலாச்சாரங்களை கடைபிடித்து வரும் நிலையில், 'இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்த நான் என்ன தக்காளி தொக்கா?' எனக்கூறும் விதத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு அதிரவைத்து இருக்கிறார் நடிகை எமி ஜாக்சன்.
A.L. விஜயின் மதராசபட்டினம் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நாயகியாக அடியெடுத்து வைத்தவர் எமி ஜாக்சன். தொடர்ந்து தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளிலும் பிரபலமடைந்த இவர், தற்பொழுது ஹாலிவுட்டிலும் காலடி எடுத்து வைத்திருக்கிறார்.
இவர்,இங்கிலாந்தை சேர்ந்த கோடிஸ்வரரான ஜார்ஜ் பனையியோடோ என்பவரை காதலித்து வந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் திருமண நிச்சயமும் செய்துகொண்டனர். வருகிற 2020ம் ஆண்டில் திருமணம் செய்து கொள்ளவும் முடிவெடுத்த இந்த ஜோடி, அதற்கு முன்னதாகவே பெற்றோராக இருக்கும் தகவல் பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
மேலும் படிக்க | ஆதிவாசிகளுக்கு உதவிய காஜல் அகர்வால்... உண்மை நாயகிக்கு குவியும் பாராட்டுக்கள்
அன்னையர் தினமான நேற்று தான் அன்னையாக இருக்கும் தகவலை, அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தார் நடிகை எமி ஜாக்சன். அந்த அறிவிப்போடு வெளியிட்டிருந்த புகைப்படத்திலும் வயிறு பெரிதான நிலையில் தோன்றியிருக்கிறார்.
Social Plugin