மதராசபட்டினம் திரைப்படத்தின் மூலம் இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட லண்டன் பியூட்டி எமி ஜாக்சன் தனது காதலரை விரைவில் மணக்க இருக்கிறார்.
அவுட்டிங், டேட்டிங் என உலகம் சுற்றிய நடிகை எமி, கடந்த ஜனவரி மாதம், லண்டன் தொழிலதிபர் ஜார்ஜ் என்பவரை காதலிப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
மேலும் அடுத்த ஆண்டு, இவரை திருமணம் செய்து கொள்வேன் என கூறிவந்த எமி, நிச்சயம் கூட முடியாத நிலையில் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்து பரபரப்பை கிளப்பினார்.
எதிர்பாராத விதமாக தான் கருத்தரித்து விட்டதை அடுத்து, வேகவேகமாக நடைபெற்று வருகிறது ஜ்யார்ஜ், எமி ஜாக்ஸனின் நிச்சயதார்த்த ஏற்பாடுகள். உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் என ஏற்கனவே நிச்சயதார்த்த அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில், விரைவில் திருமண தேதியும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Social Plugin