சின்னத்திரையில் கடந்த 2017ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி தொடரின், நாயகன், நாயகியான சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா ஆகியோரின் நிச்சயதார்த்தம் விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சி மேடையிலேயே நடந்து முடிந்துள்ளது.
திரையில் தங்களது மனம் கவரும் ஜோடிகளை, நிஜ வாழ்விலும் ஜோடியாக பார்க்க விரும்புபவர்கள் ரசிகர்கள். அப்படி இணைந்த அஜித்-ஷாலினி, சூர்யா-ஜோதிகா ஆகியோரின் வரிசையில் திருமண பந்தத்தில் இணைய இருக்கின்றனர் ராஜா ராணி சீரியல் புகழ் சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா.
சீரியல் ஆரம்பித்தது முதல் மிகவும் நெருக்கமாக பழகி வந்த இவர்கள், சென்ற வருடம் காதலில் இணைந்தனர். இதனை அதிகாரபூர்வமாக அறிவிக்காவிட்டாலும், புகைப்படங்கள் வழியே அவ்வப்போது வெளிக்காட்டி வந்தனர்.
இந்நிலையில், குறிப்பிட்ட சீரியலை ஒளிபரப்பும் விஜய் டிவியின், விருது வழங்கும் விழா நிகழ்ச்சி மேடையில் சிறந்த ஜோடிக்கான விருதை பெற்ற இவர்கள், அந்த மேடையிலேயே இருவரும் நிச்சயமும் செய்து கொண்டு ராஜா ராணி சீரியல் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளனர்.
Social Plugin