Friday, 12 April 2019

'2 வருடங்கள்' கழித்தும் 'மெர்சல்' படைத்த சாதனை - லிஸ்டில் இணைந்த புதிய ரெகார்ட்


அட்லீ இயக்கத்தில் கடந்த 2017ம் ஆண்டு வெளியான திரைப்படம் மெர்சல். இத்திரைப்படம் ரிலீசாகி கிட்டத்தட்ட இரண்டு வருடங்களை தொட்டுவிட்ட நிலையிலும், இதனது சாதனை லிஸ்டு நீண்டு கொண்டே செல்கிறது.

குறைந்த நேரத்தில் அதிக லைக்ஸ் குவித்த டீசர், வசூல், போன்ற சாதனைகளை படைத்த இத்திரைப்படத்தின், 'ஆளப்போறான் தமிழன்' பாடலும், இப்படக்குழுவிற்கு பெருமையை தேடி தந்திருக்கிறது.

அதாவது, யூட்யூப் சமூக வலைத்தளத்தில் இப்பாடல் 100 மில்லியன் பார்வையாளர்களை சமீபத்தில் எட்டி இருக்கிறது. பாலிவுட்டை ஒப்பிடும் போது தமிழ் திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மிக மிக குறைவு தான்.

இப்படியொரு சூழ்நிலையிலும், 100 மில்லியன் என்கிற பிரமாண்ட இலக்கை எட்டிய தமிழ் திரைப்பட பாடல் என்ற பெருமையை இப்பாடல் பெற்று இருக்கிறது.

Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();