#Ajith #NerkondaParvai #Gibran
நடிகர் அஜித் குறித்து திரைத்துறை பிரபலங்கள் பலர், புகழ்ந்து பேசுவதை கேட்பது வழக்கமான ஒன்றாகி இருக்கிறது. அப்படி தன்னிடம் பழகுபவர்களையெல்லாம் தனது செயலினால் வியக்க வைத்தும் விடுகிறார் அஜித்.
இந்நிலையில் வளர்ந்து வரும் இசையமைப்பாளரான ஜிப்ரானும் அஜித் உடனான முதல் சந்திப்பு குறித்து பேசி இருக்கிறார். H. வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் 'நேர்கொண்ட பார்வை' எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
Also Read | ஆதிவாசிகளுக்கு உதவிய காஜல் அகர்வால்... உண்மை நாயகிக்கு குவியும் பாராட்டுக்கள்
அதன் படப்பிடிப்புகள் ஆந்திராவில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் அத்திரைப்பட படப்பிடிப்பில் நடிகர் அஜித்தை சந்திக்கும் வாய்ப்பு, விஸ்வரூபம், தீரன் அதிகாரம் ஒன்று உள்ளிட்ட திரைப்படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றிய ஜிப்ரானுக்கு கிடைத்திருக்கிறது.
அந்த சந்திப்பில் பிற பிரபலங்களை போலவே,தலயின் எளிமையை கண்டு வியந்த ஜிப்ரானுக்கு, 'நான் இருவரும் இணைந்து படம் பண்ணலாம்' எனக்கூறி மேலும் இன்ப அதிர்ச்சி அளித்திருக்கிறார் அஜித். இந்த தகவலை தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார் இந்த இளம் இசையமைப்பாளர்.
Social Plugin