Ad Code

Responsive Advertisement

Breaking News: ட்விட்டரில் அடியெடுத்து வைத்த அஜித்!!! ஆனாலும் ஒரு டிவிஸ்ட்


#Ajith #Twitter 

திரைத்துறையில் முன்னணி நட்சத்திரமாக வலம்வந்தாலும், சினிமா சார்ந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் தவிர்த்து தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு வாழ்பவர் நடிகர் அஜித்.

ஏன் ரசிகர்களுடன் எளிதாக இணைய பயன்படும் சமூக வலைதள கணக்குகள் கூட சில நாட்களுக்கு முன்பு வரை அவருக்கு கிடையாது. சொல்லப்போனால் அவரது வீட்டில் யாரும் ஸ்மார்ட் போன்கள் கூட பயன்படுத்துவது கிடையாது.


இணைய பயன்பாடுகளுக்கு தனது கணினியையே நம்பி இருந்த அஜித்திற்கு, திடீரென சமூக வலைத்தளங்களின் மீது ஈடுபாடு வந்திருப்பதாக தெரிகிறது.

இது குறித்து அஜித்தின் நெருங்கிய வட்டாரங்களில் இருந்து வந்த தகவலின் படி, அஜித் ட்விட்டர் சமூக வலைதள பக்கத்தில் அதிகாரபூர்வமற்ற கணக்கு ஒன்றை துவங்கி இருப்பதாக தெரியவந்துள்ளது.

Also Read | முதல் சந்திப்பிலேயே இப்படியொரு பரிசா.? இசையமைப்பாளருக்கு அஜித் கொடுத்த சர்ப்ரைஸ் 

தன் தனிப்பட்ட செயல்பாடுகளுக்காக இல்லாமல், திரைத்துறையில் நடக்கும் விஷயங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற காரணத்தினாலேயே, அஜித் இந்த நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனை பற்றி அறிந்திருந்த காரணத்தினாலேயே, 'இயக்குனர் சுசீந்திரன், அஜித்திற்கு அரசியல் அழைப்பு விடுத்து ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்'' என்பதும், திரைத்துறையினர் முணுமுணுக்கும் மற்றொரு தகவல்.