Ad Code

Responsive Advertisement

அஜித்தை 'சாய்பாபா'வின் பக்தராக்கிய சம்பவம்..! வெளியான சுவாரஸ்ய தகவல்


தமிழ் சினிமாவின் முன்னனி நட்சத்திரமாக விளங்கும் நடிகர் அஜித், சாய்பாபாவின் பக்தரானது எப்படி என்பது குறித்த சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.

கார், பைக் ரேஸிங், ஏரோ மாடலிங், தொழில்நுட்ப மாணவர்களுக்கு ஆலோசனையாளர் என அறிவியல் தொழில்நுட்பங்களில் தேர்ந்த நடிகர் அஜித், நாள்கிழமை, நல்ல நேரம், ராவு காலம் என ஆன்மிகம் சம்பந்தப்பட்ட விஷயங்களிலும் நம்பிக்கை கொண்டவர்.

சொல்லப்போனால் இந்த நம்பிக்கைகளை, தன் திரைப்படங்களை சாயிபாபாவுக்கு உகந்த வியாழக்கிழமைகளில் ஆரம்பிப்பது, குறிப்பிட்ட தேதிகளில் ரிலீஸ் செய்வது என தனது சினிமா வாழ்க்கையிலும் உட்படுத்தி வருகிறார்.

Also Read | Breaking News: ட்விட்டரில் அடியெடுத்து வைத்த அஜித்!!! ஆனாலும் ஒரு டிவிஸ்ட் 

இப்படியொரு ஆன்மீக நம்பிக்கை உடையவராக அஜித்தை மாற்றியவர், நடிகர் மோகன்ராம் தானாம். வளர்ந்து வரும் சமயத்தில், தனக்கு இரண்டாம் கதாநாயகன் வாய்ப்புகளே வந்து கொண்டிருந்ததை கண்டு மனம் வருந்திய அஜித், நடிகர் மோகன் ராமிடம் 'அனைவரும் தன்னை ஒதுக்க பார்க்கிறார்கள்' என புலம்பி இருந்தாராம்.     

அப்பொழுது அவருக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக, நடிகர் 'மோகன்ராம்' உங்கள் பிரச்சனைகளை சாய்பாபாவிடம் முறையிடுங்கள் கண்டிப்பாக விடை கிடைக்கும் என கூறி இருந்தாராம்.

சாய் பாபாவின் செயலோ என்னமோ, அவரது பிரச்சனைகளும் தீர்ந்து நினைத்தபடி முன்னனி நடிகராகவும் ஆகிவிட, இன்றுவரை சாய் பாபாவை தவறாது வழிபட்டு வருகிறார் நடிகர் அஜித்து.