Breaking News

'சூப்பர் ஸ்டார்' அஜித்!!! கவர்ச்சி நடிகையின் ஒரே வார்த்தையில் கிளம்பிய பஞ்சாயத்து


எதிரும் புதிருமான விஜய்,அஜித் ரசிகர்களே சும்மா இருந்தாலும், இந்த சினிமா பிரபலங்கள் சும்மா இருக்க விடமாட்டார்கள் போல இருக்கிறதே என சொல்லும் அளவிற்கு விஜய் அஜித்து குறித்த பிரபலங்களின் கருத்து சர்ச்சையில் முடிந்து விடுகிறது.

ஏற்கனவே, அடுத்த சூப்பர் ஸ்டார் அஜித்தா? விஜயா எனும் பஞ்சாயத்து தமிழ் சினிமா ரசிகர்களிடையே சென்றுகொண்டிருக்கும் நிலையில், அஜித்தை சூப்பர் ஸ்டார் என குறிப்பிட்டு பாஞ்சாயத்தில் சிக்கி இருக்கிறார் பிரபல கவர்ச்சி நடிகை.

தீராத விளையாட்டு பிள்ளை, யாவரும் நலம் போன்ற படங்களில் நடித்தவர் நீத்து சந்திரா, இப்பொழுது அவ்வப்போது கவர்ச்சி பாடல்களில் நடனமாடிவரும் இவர், அஜித் பாலிவுட்டுக்கு வரவேண்டும் என்ற போனிகபூரின் வேண்டுகோள் பதிவில் கருத்து தெரிவித்து இருந்தார்.

அதில் சூப்பர் ஸ்டார் அஜித் பாலிவுட் வந்தால் ஹிந்தி சினிமாவுக்கே பெருமை என தெரிவித்திருந்த நிலையில், 'விஜய் இருக்க அஜித்தை எப்படி சூப்பர் ஸ்டார் என்று கூறலாம்?' என வழக்கம் போல விஜய் ரசிகர்கள் சிலர் விமர்சிக்க துவங்கிவிட்டனர்.