தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக வலம்வரும் அஜித்தை பாலிவுட்டிற்கு அழைத்து பரபரப்பை கிளப்பி இருக்கிறார் தயாரிப்பாளர் போனிகபூர்.
மறைந்த நடிகை ஸ்ரீ தேவியி வேண்டுகோளுக்கு இணங்க, போனிகபூரின் தயாரிப்பில் நேர்கொண்ட பார்வை எனும் திரைபடத்தில் நடித்து கொடுத்து இருக்கிறார் அஜித்.
இதன் படப்பிடிப்புகள் அண்மையில் நிறைவடைந்ததையொட்டி தனது சமூக வலைதள பக்கத்தில் போனிகபூர், 'நேர்கொண்ட பார்வை படப்பிடிப்புகள் வெற்றிகரமாக நிறைவடைந்ததில் மகிழ்ச்சி. நடிகர் அஜித் கலக்கி இருக்கிறார்.
விரைவில் அவர் பாலிவுட் படத்திலும் நடிக்க ஒப்புக்கொள்வார் என நினைக்கிறேன். அவருக்காக மூன்று ஆக்சன் கதைகள் ரெடியாக உள்ளது. அதில் ஏதேனும் ஒன்றிலாவது அவர் நடிக்க ஓகே சொல்லுவார் என நம்புகிறேன்' என பதிவிட்டு பரபரப்பை கிளப்பி இருக்கிறார்.
Social Plugin