Monday, 8 April 2019

அஜித்துக்கு, வாய்ப்பு வாங்கி கொடுத்தது இவர்தான்.. விஜய் ரசிகர்கள் கிளப்பும் சர்ச்சை


விஜய், அஜித் ரசிகர்களுக்கிடையேயான சண்டை ஊரறிந்த ஒன்று. இவர்களுக்கிடையேயான நீயா நானா போட்டியில், தற்பொழுது அஜித் குறித்த தகவல் ஒன்று வேகமாக பரவி வருகிறது.

இன்று தமிழ் சினிமாவில் முன்னனி நட்சத்திரமாக விளங்கும் நடிகர் அஜித், திரைத்துறையில் எந்த வித நட்சத்திர அந்தஸ்தும், உதவியும் இன்றி முன்னுக்கு வந்தவர் என்று பேசப்பட்டுவருகிறது. இதனை நடிகர் அஜித்தும் பலமுறை தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், இந்த கூற்றுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில், நடிகர் அஜித் நாயகனாக அறிமுகமான அமராவதி திரைப்படம் குறித்த தகவலை பகிர்ந்து வருகின்றனர் விஜய் ரசிகர்கள்.

அதாவது, அஜித் நடித்த 'பிரேம புஸ்தகம்' எனும் தெலுங்கு திரைப்படத்தை பார்த்து அசந்த பாடகர் S.P.பாலசுப்ரமணியம் அவர்கள் தான், அமராவதி படத்தில் அவரை நாயகனான நடிக்க வைக்க பரிந்துரை செய்து இருக்கிறார்.

இதனை பாடகர் S.P.Bயே டிவி நிகழ்ச்சி ஒன்றில் தெரிவிக்கும் காணொளியை வம்படியாக பகிர்ந்து, அஜித் அறிமுகமானதே ஒரு நட்சத்திரத்தின் மூலம் தான் என சர்ச்சையை கிளப்பி வருகின்றனர்.   

    
Disqus Comments
'