Monday, 15 April 2019

'2 வருடங்கள்' ரகசியமாக குடும்பம் நடத்தினேன்!!! சிம்பு பட நடிகை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்


இன்றைய காலகட்டத்தில் திரையுலகில் நாயகிகள் ஏனோ திருமணம் செய்து கொண்டதை கூட அறிவிக்க தயங்குகிறார்கள். அப்படி ரகசிய திருமணம் செய்து கொண்ட நடிகைகள் இலியானா, ஸ்ரேயா ஆகியோரை தொடர்ந்து லிஸ்டில் இணைந்து இருக்கிறார் நடிகை மேக்னா நாயுடு.

சிம்புவின் 'சரவணா' திரைப்படத்தில் அவரை ஒருதலையாக காதலிக்கும் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் மேக்னா. தொடர்ந்து, வைத்தீஸ்வரன், ஜாம்பவான், வீராசாமி, வாடா, குட்டி ஆகிய திரைப்படங்களில் நடித்தார்.

அதன் பின்னர் கடந்த இரண்டுவருடங்களாக, எங்கு இருக்கிறார் என்பது கூட தெரியாத அளவிற்கு மாயமான இவர், அதற்கான அதிர்ச்சிகர  காரணத்தையும் அண்மையில் பகிர்ந்து இருக்கிறார்.  



இது குறித்து சமீபத்தில் பேசிய அவர், நான் போர்ச்சுகீசிய டென்னிஸ் வீரரான, லூயிஸ் என்பவரை 2 வருடங்களுக்கு முன்பு ரகசிய திருமணம் செய்து கொண்டேன். என்னை விட 10 வயது மூத்தவரான லூயிஸ், என் தந்தையின் மூலம் எனக்கு அறிமுகமானவர்.

சமூக வலைத்தளங்களில் தொடர்ந்த எங்கள் நட்பு காதலாக மலர, கடந்த 2016ம் ஆண்டு இந்து முறைப்படி எளிமையாக ரகசிய திருமணம் செய்து கொண்டோம்' எனக்கூறி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறார்.

Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();