Ad Code

Responsive Advertisement

குடிபோதையில் காரில் பறந்த நடிகை..! வாகனங்களை இடித்து அட்டூழியம்


திரைத்துறை பிரபலங்கள் குடித்து விட்டு வாகன விபத்துக்களில் சிக்குவது தொடர்கதையாகி இருக்கிறது. இந்நிலையில் பிரபல சீரியல் நடிகை ஒருவரும், போதையில் கார் ஓட்டி வாகனங்களை சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

'ருஹி சைலேஷ் குமார் சிங்' எனும் குறிப்பிட்ட ஹிந்தி சீரியல் நடிகை, கடந்த திங்கள் கிழமை அன்று, குடித்து விட்டு தன்னிலை அறியாது வாகனம் ஓட்டி இருக்கிறார்.

இதன் விளைவாக வரிசையாக முன்னாள் சென்ற வாகனங்களை இடித்து கொண்டே சென்ற அவர், 4 இருசக்கர வாகனங்கள், 3 கார்கள் என மொத்தம் 7 வாகனங்களை சேதப்படுத்தி இருக்கிறார்.

இதனால் அவரை சுற்றிவளைத்த பிற ஓட்டுனர்கள், அவருடன் வாக்குவாதம் செய்யும் காணொளியும் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்த மும்பை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தியும் வருகின்றனர்.