நடிகர் அஜித் மற்றும் விஜய்க்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் தமிழகத்தில் உள்ள நிலையில், 'அவர்களை பற்றி ஏதேனும் தவறாக பேசிவிட்டால் விபரீதமாகிவிடுமோ' என்கிற அச்சம் பிற பிரபலங்களுக்கு உண்டு.
இப்படி ரசிகர்களிடம் சிக்கி சின்னா பின்னமானோரும் ஏராளம். இந்நிலையில் விஸ்வாசம் திரைப்படத்தில் இதே காரணத்தினால் அஜித்தை கலாய்க்கும் காட்சியில் நடிக்க தயங்கியதும், அதற்கு அஜித் என்ன கூறினார் என்பது குறித்தும் மனம் திறந்திருக்கிறார் பிரபல காமெடி நடிகர் விவேக்.
Also Read | மின்னல் வேகத்தில் முடித்து கொடுத்த அஜித்..! 'நேர்கொண்ட பார்வை' மாஸ் அப்டேட்
இது குறித்து சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசி இருந்த அவர், 'விஸ்வாசம் திரைப்படத்தில் நடிகர் அஜித்தை டேமேஜ் செய்து பேசுவது போன்ற கதாபாத்திரம் எனக்கு, அப்படி நடித்தால் அஜித்தின் ரசிகர்கள் தன்னை விமர்சிப்பார்கள் என தயக்கம் இருந்தது.
ஆனால் நடிகர் அஜித்தோ, நீங்கள் என்னை கலாய்த்தல் ரசிகர்கள் கண்டிப்பாக ஏற்று கொள்வார்கள்' என உற்சாகப்படுத்தியதாக தெரிவித்து இருந்தார்.
Social Plugin