Ad Code

Responsive Advertisement

நயன்தாராவை வைத்து பணம் சம்பாதித்தவர் விக்னேஷ் சிவன்.. வெளுத்து வாங்கிய இயக்குனர்


ராதாரவி, நயன்தாரா விவகாரத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவனை வெளுத்து வாங்கி இருக்கிறார் மேற்குத்தொடர்ச்சி மலை திரைப்பட இயக்குனர் லெனின் பாரதி.

ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையே கொண்டாட வைத்த ஒரு திரைப்படம் என்றால் அது 'மேற்கு தொடர்ச்சி மலை' தான். அவர் இயக்கி இருந்த விதத்திலேயே சினிமாவின் மீதான லெனினின் காதலை புரிந்து கொள்ள முடிந்தது.

இந்நிலையில், இப்படிப்பட்ட சினிமா காதலரான இவர், ஒரு திரைப்பட விழாவில் அண்மையில் கலந்து கொண்டு, பெருகி வரும் ஆபாச திரைப்படங்களுக்கு எதிராக அனல் தெறிக்க பேசி இருந்தார்.


'தமிழ் சினிமாவில் ஆபாச படங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது வருத்தமளிக்கிறது. நயன்தாராவை ராதாரவி கொச்சையாக பேசிய விஷயத்தில், அவர் பேசியதையும் அதை கேட்டு கைதட்டியவர்களையும் கடுமையாக விமர்சித்த விக்னேஷ் சிவன் மட்டும் என்ன யோக்கியரா?

மேலும் படிக்க | விவாகரத்து குறித்து வெளியான தகவல்... ப்ரியங்கா எடுத்த அதிரடி நடவடிக்கை

ராதாரவி அவ்வாறு பேசியது கண்டிக்கத்தக்கது என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் 'நானும் ரௌடிதான்' எனும் திரைப்படத்தில் நயன்தாராவை, 'உங்கள போடணும் சார்' என வசனம் பேசவைத்து பணம் சம்பாதித்தவர் தானே விக்னேஷ் சிவன்.

ராதாரவி தங்களை அப்படி பேசும் போது, பிறர் கைதட்டி ரசிப்பது வலிக்கிறது என்பதினால் இவ்வாறு பேசும் விக்னேஷ் சிவனுக்கு, நானும் ரௌடிதான் படத்தினை இயக்கியபோது அது அசிங்கம் என தெரியவில்லையா?' என்றிருந்தார்.