Ad Code

Responsive Advertisement

நடிகையை பின்னால் தட்டிய ஸ்ரீதேவியின் கணவர்... சர்ச்சையை கிளப்பிய வீடியோ


ஸ்ரீதேவியின் மர்ம மரணத்தை அடுத்து எழுந்த சர்ச்சைகளில் இருந்து மீண்டும், அடுத்தடுத்து திரைப்படங்களை இயக்கிவரும் போனிகபூர், நடிகையை தவறான முறையில் தொட்டதாக மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.

போனிகபூர் ஸ்ரீதேவியின் கணவரும் பிரபல பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளரும் ஆவார். இறப்பதற்கு முன்பு நடிகர் அஜித்திடம் ஸ்ரீதேவி விடுத்த வேண்டுதலின் பேரில், தற்பொழுது அவரது நேர்கொண்ட பார்வை திரைப்படத்தையும் போனிகபூர் தயாரித்து வருகிறார்.

Also Read | என்ன விட்டுருங்க ப்ளீஸ்...! நடிகைகளிடம் கெஞ்சும் சர்ச்சை நடிகர்   

இந்நிலையில், சக தயாரிப்பாளரான ஜெயந்திலால் காடாவின் மகன் திருமண வரவேற்பில் கலந்து கொண்டிருந்த போனிகபூர், பாலிவுட் நடிகை ஊர்வசி ரத்துல்லாவிடம் பேசி கொண்டிருந்தார்.

அங்கிருந்து புறப்படும் போது, நடிகையின் பின்னால் தட்டிவிட்டு விடைபெற்ற அவரது வீடியோ, சர்ச்சையுடன் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.



இதனால் நடிகையிடம் போனிகபூர் தவறாக நடந்து கொண்டதாக, பலரும் குற்றம் சாட்டிவரும் நிலையில், நடிகை ஊர்வசி ரதுல்லாவோ, 'அவர் தன்னிடம் தவறாக நடந்துகொள்ளவில்லை' எனக்கூறி இந்த குற்றச்சாட்டுகளுக்கு  மறுப்பு தெரிவித்து இருக்கிறார்.