Tuesday, 23 April 2019

பார்க்கவே பரிதாபமான தோற்றத்தில் S.P.B!!! ரசிகர்கள் அதிர்ச்சி


தமிழ் சினிமாவின் மூத்த பாடகரான S.P.B அவர்களின் சமீபத்திய புகைப்படம் ஒன்று ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

சினிமாவில் ஆயிரக்கணக்கான பாடல்களுக்கு மேல் பாடி, ரசிகர்களுக்கு பிடித்தமான ஒரு பாடகரான பாலசுப்ரமணியம் அவர்கள் சமீபத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்டு மிகவும் சிரமப்பட்டார்.

ரசிகர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் வேண்டுதலின் பலனாக உடல்நிலையில் தேறி மீண்டும், டிவி நிகழ்ச்சிகள் மேடை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருந்தார்.

இந்நிலையில், கடந்த 18ம் தேதி லோக் சபா தேர்தலில் வாக்களித்து விட்டு அவர் எடுத்துக்கொண்ட புகைப்படத்தில் வழக்கத்திற்கு மாறாக சோர்வாக காணப்பட்ட நிலையில் 'மீண்டும் உடல்நிலையில் ஏதும் பிரச்சனையா?' என ரசிகர்கள் வருத்தத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();