Friday, 12 April 2019

ஒரே லவ் லெட்டரில் கவுத்துட்டாரே.? 'கீதா கோவிந்தம்' நடிகையை கவர்ந்த ரசிகர்


சில மாதங்களுக்கு முன்னதாக, இன்கெம் இன்கெம் என பேஸ்புக் முதல் வாட்சப் வரை ஸ்டேட்டஸ் பிரியர்கள் ஒலிக்க விட்ட பாடல் நினைவிருக்கலாம். 

இப்படியொரு வெற்றிக்கு பாடலுடன், இடையில் சேலையை சொருகி ரசிகர்களின் இதயத்தை படபடக்க வைத்த ராஷ்மிக்காவும் ஒரு முக்கிய காரணம். இப்படி ஒரே பாடலில், தெலுங்கு மட்டுமல்லாது தமிழ் மொழி உள்ளிட்ட பிற மொழி ரசிகர்களையும் கவர்ந்த அவருக்கு மனம் உருகி காதல் கடிதம் எழுதி இருக்கிறார் ரசிகர் ஒருவர்.

'உங்களை திரையில் பார்த்த அந்த கணமே கவுந்துட்டேன். அய்யயோ அந்த சிரிப்பு இருக்கே! உங்க முக பாவனைகளை கண்டு என் இதயமே துடிக்க மறந்து விட்டது. உங்களை எண்ணி என்னால் ஒழுங்காக படிக்க கூட முடிவதில்லை.

எனக்கு, தெலுங்கோ, கன்னடமோ தெரியாது இருந்தாலும், உங்களை பார்த்த கணமே தீவிர ரசிகனாகிவிட்டேன். இதிலிருந்து அன்பிற்கு மொழியும் இல்லை என்பது புரிகிறது' என மனதில் உள்ள அனைத்தையும் கொட்டி தீர்க்க, 

ரசிகரின் அன்பை கண்டு உருகிய ராஸ்மிகா, இந்த கடிதத்தை தனது சமூக வலைத்தளத்தில் மகிழ்ச்சியோடு பகிர்ந்தும் இருக்கிறார்.


Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();