Ad Code

Responsive Advertisement

எவ்வளவு கவர்ச்சி காட்டவும் நான் ரெடி..! இளம் ரசிகர்களுக்கு வலைவிரிக்கும் பூனம்பாஜ்வா


சேவல் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பூனம் பாஜ்வா. தொடர்ந்து நடிகர் ஜீவாவுடன் தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் ஆகிய திரைப்படங்களில் நடித்து பிரபலமானார்.

என்றாலும் அதன் பின்னர், இவருக்கு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பெரிய படவாய்ப்புகள் ஏதும் அமையவில்லை. இதனால், குத்து பாட்டுக்கு ஆடுவது, கவர்ச்சி காட்டும் பெண்ணாக சிறு வேடங்களில் வந்து செல்வது என திரைப்படங்களில் தலைகாட்டி வருகிறார்.

சமீபத்தில் கூட இவர் நடிப்பில் வெளியான குப்பத்து ராஜா திரைப்படம் பெரிய அளவில் பேசப்படவில்லை என்றாலும், இவர் கவர்ச்சி காட்டி நடித்த காட்சிகள் இளசுகளை கவர்ந்தது.


இதனால் மீண்டும் பரபரப்பாக பேசப்பட்டு வருவதால், தனக்கான பொருத்தமான கதாபாத்திரம் கவர்ச்சி காட்டி நடிப்பது என முடிவெடுத்துள்ள அவர் தொடர்ந்து அது போன்ற கதாபாத்திரங்களை எதிர்பார்த்து காத்திருக்கின்றாராம்.