Breaking News

இப்படி ஏமாத்திட்டாரே..! ராகவா லாரன்ஸால் புலம்பும் 'ஓவியா'


பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ஓவர் நைட்டில் ஒபாமா ஆனவர் நடிகை ஓவியா. அந்த நிகழ்ச்சியில் வெல்லவில்லை என்றாலும் மக்களின் மனதை வென்று லட்சக்கணக்கான ரசிகர்களை சம்பாதித்து கொண்டார்.

இதனால், முன்னணி நடிகைகளுக்கு இணையான மவுசு திரைத்துறையில் கிடைத்தது. என்றாலும் அதனை சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லையே என புலம்ப துவங்கி இருக்கிறார் அவர்.

இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த காஞ்சனா-3 திரைப்படத்தில் தான் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு முதன்முதலில் நடிக்க ஒப்பந்தமானார். முதன்மை கதாநாயகி எனக்கூறி நடிகர் லாரன்சும் இவரை நடிக்க வைத்திருக்க, படத்தை பார்த்த பின்புதான் அவருக்கு அதிர்ச்சி.


மூன்று நாயகிகளில் ஒருவராக ஒரு துணை நாயகியை போல தன்னை காட்டி இருக்க, கடும் அதிருப்திக்கு ஆளான ஓவியா, லாரன்ஸ் இப்படி ஏமாத்திட்டாரே என புலம்பி வருகிறாராம்.