Tuesday, 23 April 2019

'விஸ்வாசம்-பேட்ட' படங்களை தெறித்து ஓட விட்ட காஞ்சனா-3!!!


ராகவா லாரன்ஸ் இயக்கி, நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படமான காஞ்சனா-3, பேட்ட விஸ்வாசம் திரைப்படங்கள் படைத்த வசூல் சாதனையை தகர்த்துள்ளது.

தமிழ் சினிமாவில் பேயை காட்டி, சிரிக்க வைத்து அதே சமயம் பயமும் முறுத்தும் திகில் காமெடி வகை திரைப்படங்கள், லாரன்ஸின் காஞ்சனா திரைப்பட தொடர்களை அடுத்து, தொடர்ந்து வெளியாக துவங்கியது.

அதற்கான மார்க்கெட் இப்பொழுது டல்லடித்துவிட்ட போதிலும், காஞ்சனா திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே தொடர்ந்து இருந்து வந்தது.

இதுவரை வெளியான படங்களை போல ஒரே கதைக்களத்தை கொண்டிருந்தாலும், குடும்ப ரசிகர்களையும் குழந்தைகளையும் கவரும்படி அமைந்திருந்ததால், தியேட்டரை நோக்கி படையெடுக்கிறது மக்கள் கூட்டம்.

விளைவு, உலகளாவிய 3 நாட்கள் வசூலில், 48 கோடி எனும் மாபெரும் தொகையை எட்டி இருக்கிறது. இதற்கு முன்னதாக வெளியான, பேட்ட திரைப்படம் 42.5 கோடி ரூபாயும், விஸ்வாசம் 38 கோடி ரூபாயும் 3 நாட்களில் வசூல் செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();