யோகிபாபு நடிப்பில் வெளியாகவுள்ள 'தர்ம பிரபு' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள வசனம், ஆளும்கட்சியான அதிமுகவில் நடைபெற்ற குளறுபடிகளை விமர்சிக்கும் விதத்தில் அமைந்துள்ளது.
விமல் நடித்த கன்னிராசி திரைப்படத்தை இயக்கிய முத்துகுமரனின் அடுத்த படைப்பாக, உருவாகியுள்ளது தர்மபிரபு. யோகிபாபு எமனாக கலக்கி இருக்கும் இந்த திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி இருந்தது.
இந்நிலையில், குறிப்பிட்ட டீசரில், இங்கெல்லாம் தகுதியுடையவர்களா பதவிக்கு வருகின்றனர்? அம்மா இல்லனா சின்னம்மா, அப்பா இல்லனா சின்னப்பா! என்கிற வசனம், ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுகவில் ஏற்பட்ட குளறுபடிகளை விமர்சிப்பது போன்று உள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Social Plugin