Ad Code

Responsive Advertisement

யோகிபாபுவுக்கு இருக்கும் அக்கறை 'ரஜினி-விஜய்க்கு' இல்லையே..? குவியும் விமர்சனங்கள்


தமிழ் திரையுலகில் நடிகர்களை ரசிகர்கள் கடவுளாக பார்க்கும் கெட்ட பழக்கம் நிலவி வருகிறது. கட்டவுட் வைப்பது, பாலாபிஷேகம் செய்வது, கோவில் கட்டுவது என ரசிகர்களின் அளப்பறைகளுக்கு ஒரு அளவே இல்லாமல் போய் கொண்டிருக்கிறது.

பெரும்பாலான முன்னணி நடிகர்களும் ரசிகர்களின் இந்த செயல் தங்கள் திரைப்படங்களுக்கு விளம்பரமாக இருக்கும் என கண்டுகொள்வதில்லை. இதனை ரசிகர்களிடம் தாங்களே செய்ய கூறி கேட்கும் ஒரு சில நடிகர்களும் திரைத்துறையில் இருக்கின்றனர்.

இப்படி இருக்க பிரபல காமெடி நடிகரான யோகிபாபுவோ, இத்தகைய ரசிகர்களின் செயலை முளையிலேயே கிள்ளி எரிந்து பாராட்டுகளை பெற்று வருகிறார்.

அவர் நடித்து வெளிவர இருக்கும் பட்டிபுலம் எனும் திரைப்படத்திற்காக பிரமாண்ட கட்டவுட் வைக்கும் பணிகளில் ஈடுபட்டு இருக்கின்றனர் ஒரு சில ரசிகர்கள். இது குறித்து அறிந்து பதைபதைத்த யோகிபாபு,

'ரசிகர்களின் இது போன்ற செயல்களை நான் வரவேற்பதில்லை. தயவு செய்து பாலாபிஷேகம் போன்ற செயல்களில் ஈடுபட்டு உணவு பொருட்களை வீணடிக்காதீர்கள்' என முன்னணி நடிகர்களே பேசாத ஒன்றை, பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பேசி பலரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறார்.