Ad Code

Responsive Advertisement

ஏன் இந்த வெட்டி பந்தா..? யோகிபாபுவை விமர்சிக்கும் திரையுலகம்


மிகவும் கஷ்டப்பட்ட குடும்ப சூழ்நிலையில் இருந்து, ஒரு நாள் கால்ஷீட்டுக்கு லட்சம் ரூபாய்க்கும் மேல் சம்பளம் பெரும் வான்டெட் நடிகராகி இருக்கிறார் யோகிபாபு.

நயன்தாராவுடன் டூயட் பாடியது, இவர் தோன்றும் காட்சிகளில் எல்லாம் ரசிகர்கள் விசில் பறக்க விடுவது என நாயகர்களுக்கிணையான மாஸினை காமெடி நடிகராக இவர் சம்பாதித்து இருக்கிறார்.

இதனை தொடர்ந்து அடுத்தகட்டமாக, சென்னை ரோகிணி தியேட்டரில் பட்டிபுலம் எனும் யோகிப்பாபு முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படத்தினை கொண்டாடும் விதத்தில், ரசிகர்கள் கட்டவுட் பாலாபிஷேகம் நடத்த இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இது குறித்து அறிந்து யோகிபாபுவும் குறிப்பிட்ட ரசிகர்களை ஊக்குவித்ததாக தெரிகிறது.

இந்நிலையில், விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களே ரசிகர்களின் இத்தகைய செய்கையை தவிர்க்க கூறிவரும் நிலையில், ஒரு காமெடி நடிகராக இந்த வெட்டி பந்தா உங்களுக்கு இது தேவைதானா? என திரையுலகினர் பலரும் யோகிபாபுவை விமர்சித்து வருகின்றனர்.