திரையுலக பிரபலங்கள் தங்களது விளம்பரத்திற்காக உபயோகித்து கொள்ளும் மாபெரும் ஆயுதங்களில் ஒன்று சர்ச்சை. முன்னதாக நடிகை கஸ்தூரி இந்த ஆயுதத்தில் கைதேர்ந்தவராக, சர்ச்சைகளில் தேடி தேடி சிக்கிவந்த நிலையில் தற்பொழுது நடிகை யாஷிகா ஆனந்தும் இந்த லிஸ்டில் இணைந்திருக்கிறார்.
இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தில் படுமோசமான கதாபாத்திரம், பிக்பாஸ் நிகழ்ச்சி என யாஷிகா ஆனந்த் பிரபலமானதே சர்ச்சைகளின் மூலம் தான் எனும் நிலையில், அதே பாணியை தொடர்ந்து கடைபிடித்து வருகிறார்.
கண்கூச வைக்கும் படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது, கிண்டல் செய்பவர்களை ஆபாசமாக நோஸ் கட் செய்வது என தொடர்ந்து தனது இமேஜை கெடுத்துக்கொள்ளும் இவர், திரைப்படங்களில் நடிக்க நல்ல கதாப்பாத்திரங்கள் எதிர்பார்ப்பதுதான் வினோதம்.
Social Plugin