Ad Code

Responsive Advertisement

வெளிநாட்டிலும் ஓயாத 'விஸ்வாசம்'... லிஸ்டில் இணைந்த புதிய சாதனை


அஜித் நடிப்பில் பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகி இருந்த விஸ்வாசம் திரைப்படம், மாபெரும் வெற்றிப்படமாக அமைந்து வசூல் சாதனை படைத்தது.

சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்தின், பேட்ட திரைப்படத்துடன் வெளியாகி இத்தகைய சாதனை படைத்ததே மாபெரும் சாதனை எனும் நிலையில், 50 நாட்களை கடந்தும் 50 மேலான திரையரங்குகளில் இன்றும் திரையிடப்பட்டு வருகிறது.

இந்த டிஜிட்டல் யுகத்தில் படம் ரிலீசான முதல் நாளிலேயே HD தரத்தில் தமிழ் ராக்கர்ஸ் போன்ற பைரஸி இணையதளங்களில் வெளியிடப்பட்டு விடுகிறது. இதனால் திரைப்படங்கள் திரையரங்குகளில் ஓரிரு வாரங்கள் தாக்குபிடிப்பதே பெரிது எனும் நிலையில், 50 நாட்களை கடந்து விஸ்வாசம் திரையிடப்பட்டு வருவது மாபெரும் சாதனை தான்.

இது ஒரு புறம் இருக்க, கனடா நாட்டை சார்ந்த டொராண்டோ மாகாணத்திலும் விஸ்வாசம் திரைப்படம் '9வது' வாரத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறதாம். குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படமான விஸ்வாசம் வெளிநாட்டிலும் கொண்டாடப்பட்டு வருவது, அஜித் ரசிகர்களால் தமிழகத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள் 

வெளியான 1 மணி நேரத்திலேயே சாதனை.. அசத்தும் நேர்கொண்ட பார்வை