Ad Code

Responsive Advertisement

10வது வாரத்திலும் கூட்டம் அள்ளுது... விஸ்வாசத்தை கொண்டாடும் பிரபல தியேட்டர்


இந்த வருட பொங்கலுக்கு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் விஸ்வாசம். வசூல் மற்றும் விமர்சன ரீதியாக வெற்றி அடைந்த இத்திரைப்படத்தை, தியேட்டர் உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும் தலையில் வைத்து கொண்டாடினர்.

தமிழ் சினிமாவில் இப்பொழுதெல்லாம் திரைப்படங்கள் 10 நாளை தாண்டுவதே பெரிது எனும் பட்சத்தில், 50வது நாளில் 150 தியேட்டர்களில் திரையிடப்பட்டு மாபெரும் சாதனையும் விஸ்வாசம் படைத்திருந்தது.

இந்நிலையில், படம் வெளியாகி 10 வாரங்கள் ஆகிவிட்ட நிலையில் அரங்கம் நிறைந்த காட்சியாக விஸ்வாசம் திரையிடப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறது பிரபல திரையரங்கு.

Also Read | 'ஃபேக் ஐடி, கெட்ட வார்த்தை' அப்போ இவர் ரசிகர் தான்.... சீண்டும் கஸ்தூரி   

மதுரையில் உள்ள வெற்றி சினிமாஸ் எனும் குறிப்பிட்ட திரையரங்கம் தங்களது ட்விட்டர் பக்கத்தில் இந்த தகவலை பகிர்ந்திருந்த நிலையில், B மற்றும் C சென்டர்களில் இத்தகைய சாதனையை படைக்க, விஸ்வாசம் போன்ற குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படங்களாலேயே முடியும் எனவும் பதிவிட்டிருக்கின்றனர்.