Ad Code

Responsive Advertisement

படப்பிடிப்பில் கோர விபத்து... நடிகர் விஷால் மருத்துவனையில் அனுமதி


திரைப்பட படப்பிடிப்பில் நடந்த கோர விபத்தில் பலத்த காயங்களுடன் நடிகர் விஷால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.

சுந்தர் C இயக்கத்தில் விஷால், தமன்னா நடிக்க ஒப்பந்தமாகி இருக்கும் திரைப்பட படப்பிடிப்பு நேற்று துருக்கியில் துவங்கி இருந்தது. 50 நாட்கள் நடைபெற இருந்த இத்திரைப்பட படப்பிடிப்பானது, விபத்து ஒன்றினால் ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது. 

பைக் ஸ்டண்ட் காட்சி ஒன்றில் விஷால் நடித்து கொண்டிருந்தபோது தவறி விழுந்து ஏற்பட்ட இந்த விபத்தினால், அவருக்கு கை கால்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டதாக தெரிகிறது.

இதனைபடுத்து அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நடிகர் விஷால் கட்டுகளுடன் காணப்படும் புகைப்படமும் சமூக வலைத்தளங்களில் உலா வர துவங்கியுள்ளது.