Ad Code

Responsive Advertisement

'என் சக நடிகர்களுக்கு விராட் கோலி எவ்வளவோ மேல்'... தமன்னா சர்ச்சை கருத்து


மில்க் பியூட்டி என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் நடிகை தமன்னா. முன்பு போல பெரிய அளவில் முன்னணி நடிகர்களின் படவாய்புக்கள் இல்லை என்றாலும், இன்றும் தனது மார்க்கெட் மதிப்பை உச்சத்திலேயே வைத்திருக்கிறார்.

இவரது நடிப்பில், குயின் திரைப்பட ரீமேக்கான, 'தட் இஸ் மகாலட்சுமி' எனும் தெலுங்கு திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், அத்திரைப்பட ப்ரமோஷன் நிகழ்ச்சியில் தன்னுடன் நடித்த நடிகர்கள் குறித்த சர்ச்சை கருத்து ஒன்றினை தெரிவித்து இருக்கிறார்.

அந்நிகழ்வில் பேசிய நடிகை தமன்னா, விராட் கோலி உடனான காதல் வதந்திகள் குறித்த கேள்விக்கு பதில் அளித்தார். அதில், 'விராட் கோலியுடன் விளம்பரம் ஒன்றில் நடித்த பிறகு காதல் வதந்திகள் வெளிவர துவங்கியது. உண்மையில் அந்த விளம்பரத்திற்கு பின் அவரை ஒருமுறை கூட சந்தித்தது இல்லை.

ஆனால் ஒன்றை மட்டும் என்னால் கூற முடியும், என்னுடன் நடித்த பல நடிகர்களை விட, விராட் கோலியுடன் எளிதாக பணிபுரிய முடிந்தது. அந்த விதத்தில் அவர் எவ்வளவோ மேல். கிரிக்கெட் வீரராக இருந்தும் மிக சுலபமாக நடித்தார், என புகழ்ந்திருந்தார்.