Ad Code

Responsive Advertisement

பணத்திற்காக மருத்துவமனையில் நாடகம்..? சர்ச்சையில் சிக்கிய சூர்யா பட நாயகி


விஜய், சூர்யா இணைந்து நடித்த பிரண்ட்ஸ் திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை விஜயலட்சுமி. அதன் பின்னர் பெரிய அளவில் ஜொலிக்கவில்லை என்றாலும் தற்பொழுது டிவி தொடர்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவர், மருத்துவமனையில் சிகிச்சைக்கு பணம் இன்றி தவித்து வருவதாக செய்திகள் சமீபத்தில் செய்திகள் வெளியாகி பரபரப்பினை கிளப்பி இருந்தது.

இந்நிலையில், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் அவர்கள், 'தான் மருத்துவமனையில் உயிருக்கு போராடிய போதும் உதவி செய்ய முன்வரவில்லை' என வீடியோ வழியே புலம்பி இருந்தார் விஜயலட்சுமி.

Also Read | 'நயன்தாரா-ராதாரவி' பஞ்சாயத்தில் ராதிகாவை வம்புக்கு இழுத்த சின்மயி 

இவரது இந்த குற்றச்சாட்டிற்கு பதில் அளித்துள்ள சிவராஜ் , 'உடலிலோ மனத்திலோ குறையோடு இருந்து, கஷ்டப்படுபவர்களுக்கு வேண்டுமானால் உதவலாம். அப்படிப்பட்டவர்களே கடினமாக உழைக்கும் போது, கைகால்கள் நன்றாக இருக்கும் இவரால் தன்னை கவனித்துக் கொள்ள முடியாதா என்ன?' என பதிலடி கொடுத்திருந்தார்.


சிவராஜ் கூறியதை போலவே, 'விஜயலட்சுமி பணத்திற்கு வழியே இல்லாமல் இருப்பவர் அல்ல. தொடர்ந்து நாடகங்களில் நடித்து வந்த அவர், காசே இல்லை என கூறி உதவி கேட்பதெல்லாம் வெறும் நாடகம்' என அவரது ரசிகர்களும் நடிகையை தாக்கி பேசி வருகின்றனர்.